எவன்கார்ட் நிறுவனத்தால் ரஷ்ய யுத்தத்திற்கு இலங்கையர்கள் விற்கப்படுகின்றனர் – தயாசிறி ஜயசேகர

எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் ரஷ்ய உக்ரைன் போருக்கு இலங்கையர்கள் கூலிப்படையாக விற்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.
ஆனால் அது இந்த நாட்டில் உள்ள நிறுவனமா அல்லது வெளிநாட்டில் உள்ள தனி நிறுவனமா என்பது தமக்கு தெரியாது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தை டிலான் மற்றும் சுரேஷ் என்ற இருவர் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் இந்நாட்டின் போர்வீரர்கள் ரஷ்யாவிற்கு கூலிப்படையாக விற்கப்படுகின்றனர்.
அந்த நாட்டில் பெருமளவிலான இலங்கையர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)