லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இடம்பெற்ற இலங்கையின் இரத்தினக் கற்கள்!
பிரான்ஸில் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிவாய்ந்த நகைகளில் இலங்கையில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட இரத்தினக் கல் ஒன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னர் நெப்போலியன், அவரது மனைவி மற்றும் அவரது வாரிசுகளின் நகைகளில் இந்த இரத்தினக் கல் பதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராணி மேரி-அமெலி ( Marie-Amélie) மற்றும் ராணி ஹார்டென்ஸ் (Hortense) அணிந்திருந்த கிரீடங்களிலேயே இந்த இரத்தினக்கற்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கிரீடத்தில் மட்டும் 24 சிலோன் நீலக்கற்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வைரங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.5–4.2 பில்லியன் வரை மதிப்புள்ள இந்த நீலக்கல் தொகுப்பு, லூவ்ரேவின் (Louvre) நட்சத்திர கண்காட்சிகளில் ஒன்றாகும்.
இது இலங்கையில் இரத்தினக்கல் வியாபாரம் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்றமைக்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறது.





