இலங்கையில் தேவைக்கு அதிகமான அளவு அரிசி உள்ளது – ஜனாதிபதி அநுரகுமார
இலங்கையில் தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
களுத்துறை – கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி செலுத்துவதிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளது.
ஆகையால் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது..” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.





