இலங்கை : வானளாவிய கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்!
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்கக் கூடிய திறன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளதா என்று எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அரசாங்க தரப்பு அமைச்சர் அக்ரம் இல்லியாஸ், உயரமான கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
அண்மை காலமாக வணிக கட்டிடங்கள் தீ விபத்திற்கு உள்ளாகும் சம்பவம் பரவலாக இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதங்கள் வந்துள்ளன.
(Visited 6 times, 1 visits today)





