ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு வெற்றிடம் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)