இலங்கையில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு
இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு இன்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி இது அமைந்துள்ளது.
இதன்படி 14,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையின் 500 பேர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 400 இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளுக்காக 15,806 சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 8 times, 1 visits today)