வட அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் அமெரிக்கா பாடல் பாடி அசத்திய தென் கொரிய அதிபர்!(வீடியோ)

அமெரிக்கா வந்திருக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க பாடல் பாடி அசத்தியுள்ளார்.

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காலா ஸ்டேட் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எழுபதாண்டு கால நட்பின் நீட்சியாக, வெள்ளை மாளிகையில் காலா ஸ்டேட் விருந்திற்கு யூன் சுக் இயோல் அழைக்கப்பட்டிருந்தார்.

விழாவில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் பிரபலமான “American pie” பாடலை பாடியுள்ளார். மிகவும் நேர்த்தியாக ஆங்கில பிழையில்லாமல் அவர் பாடியதை கேட்டு அவையிலிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்.அவர் பாடலை பாடி முடித்ததுமே அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்துள்ளனர், ஜோ பைடன் உற்சாகத்தில் யூன் சுக் இயோலை பாராட்டியுள்ளார்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் கரோக்கியின் ரசிகர் மட்டுமல்லாது அமெரிக்காவின் பாடல்களை விரும்பி கேட்பார் என தெரிய வந்துள்ளது.இந்நிலையில் விருந்துக்கு முன்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை வடகொரியா சந்திக்குமென, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்