செய்தி விளையாட்டு

SLvsBAN – இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 96 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி