சிங்கப்பூரில் ஸ்திரமான நிலையில் பொருளாதாரம் – வேலையின்மை வீதம் குறைவு
 
																																		சிங்கப்பூரில் வேலையின்மை வீதம் குறைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வேலை செய்வோர் வீதம் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி அடைந்து செல்வதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இரண்டாம் காலாண்டில் 10,400 ஆக இருந்த வேலைவாய்ப்பு, மூன்றாம் காலாண்டில் 24,800 பேராக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள், வெளிநாட்டவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலையின்மை விகிதமும், ஆட்குறைப்பு விகிதமும் குறைவாகவும் நிலையாகவும் இருந்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 8 times, 8 visits today)
                                     
        



 
                         
                            
