இணைய மோசடியாளர்களுக்கு பிரம்படி தண்டனையை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர்
சிங்கப்பூரில்(Singapore) இணைய மோசடி செய்பவர்களுக்கு குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 06 முதல் 24 பிரம்படிகள் வரை தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சிங்கப்பூர் 2020 முதல் 2025ம் ஆண்டின் முதல் பாதி வரை மோசடிகள் மூலம் $2.8 பில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக உள்துறைக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன்(Sim Ann) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“மோசடிகளைச் செய்யும் குற்றவாளிகள், முக்கியமாக தொலைதூரத் தொடர்பு மூலம் ஏமாற்றுபவர்கள் குறைந்தது ஆறு பிரம்படிகளால் தண்டிக்கப்படுவார்கள்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மோசடிக்கு வங்கிக் கணக்குகள் அல்லது சிம் கார்டுகளை வழங்கி உதவுபவர்கள் மசோதாவின் படி 12 பிரம்படிகள் வரை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.




