இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி மகளின் காதல் விவகாரம் – தந்தை தாக்கியதில் இளைஞன் மரணம்

ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று காலை வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அவரை கட்டையால் தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

தற்காப்புக்காக வீட்டு உரிமையாளர் இளைஞனை தாக்கிய போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதுடைய ராஜபக்ச முதியன்ஸலாகே நிப்புன் சஞ்சுல என குறிப்பிடப்படுகிறது.

வீட்டு உரிமையாளரின் மகளுக்கும், உயிரிழந்த நபருக்கும் இடையிலிருந்த காதல் விவகாரமே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ரிதிமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!