அரசியல் இந்தியா

சூப்பர் பெயரில் சீமனின் புதிய ட்விட்டர் கணக்கு! பிரதமர் என்ன சொல்ல போகிறார்.. பொங்கிய காளியம்மாள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அது போல் அவருடைய கட்சி நிர்வாகிகள் என சுமார் 20 பேரின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெரிவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான் ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது என்று சீமான் தெரிவித்திருந்தார்.

கருத்து சுதந்திரம் குறித்து வெளிநாடுகளில் பேசும் பிரதமர் எங்களது ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு என்ன சொல்ல போகிறார் என சீமான் கேள்வி எழுப்பினார்.

புதிய ட்விட்டர் கணக்கு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.

பழைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் புதிதாக ட்விட்டர் கணக்கை சீமான் தொடங்கினார். செந்தமிழன் சீமான் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.

முதல்வர் கண்டனம்

இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கொந்தளிப்பு

ஒருபக்கம் திமுக மீதும், மறுபக்கம் பாஜக மீதும் பாய்ந்துள்ளார்.. 2 ட்வீட்களையும் அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்களில், அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ஒன்றிய அரசு தானாம். திமுகவிற்கு சம்பந்தம் இல்லையாம்… தமிழ்நாட்டில் முதன்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கணக்குகளை தமிழ்நாட்டு திமுக கட்சியின் அழுத்தம் இல்லாமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு தடை செய்தது என்று சொல்வதை நம்ப நாங்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை.

அப்போ ஒன்றிய அரசை தமிழ்நாட்டு திமுக அரசை விட, நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது என்று ஒத்துக்கொள்.

நாம் தமிழர் பிஜேபி பி டீம் என்று சொல்லிக் கொண்டு இனிமேல் உருட்டாதிங்க..” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த