லாவோஸில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: மூவர் மாயம்
லாவோஸின் மேகொங் நதியில் (Mekong River) 140-க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகு பாறையில் மோதி கவிழ்ந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹுவே சாய் (Huay Xay) நகரிலிருந்து லுவாங் பிரபாங் (Luang Prabang) நோக்கிச் சென்ற இந்தப் படகில் 118 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 29 உள்ளூர் மக்களும் பயணித்துள்ளனர்.
விபத்தின் போது போதிய உயிர்காப்பு அங்கிகள் (Life jackets) இல்லாததால் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர்.
இதில் காணாமல் போன லாவோஸ் பெண் ஒருவரினதும், ஒரு வயதுக் குழந்தையினதும் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு குழந்தையைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எஞ்சிய பயணிகள் அனைவரும் மற்றொரு படகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.





