மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் வரிசையில் முன்னிலை வகிக்கும் சவுதி அரேபியா!
மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளின் வரிசையில் சவுதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முன்னிலை வகிக்கிறது.
இந்த ஆண்டு குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 345 ஆக காணப்பட்டிருந்தது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரச்சாரக் குழுவான ரிப்ரைவ் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கைதிகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு பத்திரிகையாளரும், 05 பெண்களும் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





