ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யா – கையெழுத்தான ஒப்பந்தம்!

ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில்  அணு மின் நிலையமொன்றை  நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம்,  சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன் ஒரு கூட்டு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக, ரஷ்யா விண்வெளியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய தசாப்தங்களில் அதன் ஆதிக்கம் குறைந்துள்ளது.  தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக உள்ளது.

ஆகஸ்ட் 2023 இல் ஆளில்லா லூனா-25 என்ற விண்கலத்தை ஏவியது. இருப்பினும் குறித்த விண்கலம் இலக்கை அடைவதற்கு முன்பே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ரஷ்யாவின் விண்வெளி முயற்சியில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos), 2036 ஆம் ஆண்டுக்குள்   சந்திர மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைச் செய்ய லாவோச்ச்கின் அசோசியேஷன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும்   அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளது.

இந்த ஆலையின் நோக்கம் ரஷ்யாவின் சந்திர திட்டத்திற்கு சக்தி அளிப்பதாகும், இதில் ரோவர்கள், ஒரு ஆய்வகம் மற்றும் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!