வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தொர்ட பில் வெளியான தகவல்
இறக்குமதி கட்டுப்பாடுகள் 928 பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும், அவற்றில் 306 வாகனங்கள் காணப்படுவதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கம் ஆரம்பத்தில் 747 பொருட்களுக்கு 2022 ஏப்ரல் 16 இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதைத் தொடர்ந்து 2022 மே 22, அன்று மேலதிகமாக 747 பொருட்களும், 2022 ஆகஸ்ட் 24 அன்று 1,467 பொருட்களும் தடைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், அண்மைய மாதங்களில் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளதால், அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது.
மேலும், 2023 ஜூன் 10 முதல் அமலுக்கு வரும் வகையில், 286 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது,