இலங்கை

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றுப்படுகையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நில்வள ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னறிவித்தபடி மழை பெய்தால் சில இடங்களில் நில்வலா ஆற்றின் பெரிய வெள்ளப் பாதுகாப்புக் கரைகள் நிரம்பி வழியும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனம் தெரிவித்துள்ளது.

இதன்படி,  மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, அதுரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட நில்வலா ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலை ஏற்படும் பட்சத்தில் உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோல் விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்