செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்காக பில்லியன் ரூபாய்களை ஒதுக்கும் ரணில் அரசாங்கம்!
செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அடுத்தவருடமாவது அதனை செலவிடுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உங்களிற்கு இது முற்றிலும் புதிய எதிர்காலம் நாங்கள் இதனை உள்வாங்க தயாராக இருக்கின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர் முற்றிலும் புதிய கல்வி திட்டம் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்களை உருவாக்கும் கல்விமுறை குறித்து தான் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 5000 மருத்துவர்களை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.