ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய பட்ஜெட் – பாரிய நன்மையை பெறும் புலம்பெயர்ந்தோர்!
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 350,000 புலம் பெயர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பகுப்பாய்வு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கூடுதல் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய பங்கைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகள் நன்மைக்கான உச்சவரம்பு இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதன்படி பாகிஸ்தானில் 59,948 குடும்பங்கள் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தப்படியாக வங்கதேசத்தில் 26,294 குடும்பங்களும், நைஜீரியா மற்றும் சோமாலியா முறையே 22,838 மற்றும் 17,407 குடும்பங்களையும் கொண்டுள்ளன.
மொத்தத்தில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட 710,882 பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குடும்பங்கள் யுனிவர்சல் கிரெடிட்டைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





