கொழும்பில் வைத்தியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்!
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம் என்ற சிறுவன் சிறுநீரக கோளாறால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 02 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருடைய மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் மரணத்திற்கு நீதிக்கோரி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதி போராட்டம் ஒன்று இன்று (23.09) முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





