பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபல வங்கதேச பத்திரிகையாளர்
நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறையினரால் வங்கதேச(Bangladesh) பத்திரிகையாளர் அனிஸ் ஆலம்கீர்(Anis Alamgir) கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்காவில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியேறிய பிறகு, ஆலம்கீரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தர பாசிம்(Uttara Paschim) காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பத்திரிகையாளர் பலத்த பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகள் மூலம் நாட்டை சீர்குலைக்கவும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும் சதி செய்ததாக ஆலம்கீர் மற்றும் நான்கு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், ஆலம்கீரின் கைது நடவடிக்கை பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது.





