மீள்கட்டுமான நிதியத்திற்கு ப்ரைம் லாண்ட் (Prime Land) நிறுவனம் 200 மில்லியன் ரூபா நன்கொடை
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Prime Land நிறுவனம் 200 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ப்ரைம் லாண்ட் (Prime Land) குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணைத் தலைவர் சந்தமினி பெரேரா ஆகியோர் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று கையளித்தனர்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.





