இலங்கை: ஜனாதிபதி நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி நிதியம் 01 ஜனவரி 2025 முதல் புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) இன்று அறிவித்துள்ளது.
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டடத்தின் 3ஆவது மாடியில் ஜனாதிபதி நிதியம் இயங்கி வந்தது.
ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படுகிறது.
01 ஜனவரி 2025 முதல், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் புதிய அலுவலகத்திற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)