வட அமெரிக்கா

அதிபர் தேர்தல் 2024 ; 60 நிமிட நேர்காணலில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த டிரம்ப்

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நிமிட தேர்தல் நேரடிப் பிரசார நேர்காணலில் பங்கேற்க மறுத்துவிட்டார் என்று சிபிஎஸ் நியூஸ் அக்டோபர் 1ஆம் திகதி தெரிவித்தது.

அடுத்த வாரம் சிறப்பு ஒளிபரப்பாக அந்த நேர்காணல் இடம்பெறவிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சிறப்பு தேர்தல் நிகழ்ச்சி அக்டோபர் 7ஆம் திகதி நடைபெறும். இந்த நேர்காணலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், அவருடன் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஆளுநர் டிம் வால்ட்சும் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

நேர்காணலை நடத்தும் செய்தியாளரான ஸ்காட் பெல்லி, முன்னதாக டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்.ஆனால் டிரம்ப்பின் பிரசாரக்குழு இதில் பங்கேற்க வேண்டாம் என்று பின்னர் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டிரம்புக்கு விடுத்த அழைப்பு அப்படியே இருக்கும் என்று சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டது.

ஆரம்பத்தில் நேர்காணல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இன்னமும் திட்டமிடப்படவில்லை என்றும் டிரம்ப்பின் பேச்சாளர் ஸ்டீவன் சியுங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலுக்கு முன்பு வரும் வாரங்களில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் 60 நிமிட நேர்காணலில் பங்கேற்பது வழக்கம். டிரம்ப்பின் பிரசாரக் குழு முதலில் இதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டது என்று சிபிஎஸ் கூறியது.

வரும் அக்டோபர் 7ஆம் திகதி இந்த விவகாரம் குறித்து பார்வையாளர்களிடம் பெல்லி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 61 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்