இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷக்கள் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது – நாமல்!
உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது திஸாநாயக்கவின் காணொளி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் பேசிய அவர், “ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக நாங்கள் உகண்டாவிலும் பல்வேறு நாடுகளிலும் பில்லியன் கணக்கான டொலர்களை பதுக்கி வைத்துள்ளோம் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதி ஏகேடி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 23 times, 1 visits today)