இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வருமாறு அந்நாட்டின் சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த நண்பர் என்று அவர் அழைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு பின்னர், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறவுள்ளார்.
இஸ்ரேலின் நெருக்கமான நண்பராகவும் இஸ்ரேல்-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)