இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாநியூகினியாவில் இன்று (31.12) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியது, ஆனால் நிலநடுக்கம் நிலத்தில் மையம் கொண்டிருப்பதால், பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)