ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில், தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பல தசாப்த கால மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்கனவே பலவீனமடைந்த வீடுகளின் தயார்நிலை மற்றும் பாதிப்பு குறித்த கவலைகள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன.





