பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோதும் அபாயம் – பேரிடர் குறித்து நாசா எச்சரிக்கை
பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் ஒன்று மோதும் சாத்தியக்கூறு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு 72 சதவீதம் சாத்தியம் உள்ளதென அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமி மீது அந்தக் குறுங்கோள் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பகட்ட ஆய்வில், அந்த குறுங்கோளின் அளவு, அதன் தன்மை, குறுங்கோளில் உள்ள பொருள்கள், பயணப்படும் பாதை உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை என்ற நாசா தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்தக் குறுங்கோள் மோதல் மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
பூமி மீது மோத உள்ள குறுங்கோள் குறித்த ஆய்வை ஏப்ரல் மாதம் தொடங்கிய நாசா, கடந்த 20-ஆம் திகதி தனது ஆய்வு முடிவை வெளியிட்டது.