புற்றுநோயால் பிரபல அமெரிக்க சமூக ஊடக நட்சத்திரம் 14 வயதில் காலமானார்

க்ளோஹவுஸ் என்ற உள்ளடக்க உருவாக்கக் குழுவின் உறுப்பினரான ஜூசா பெய்ன் கடுமையான மைலோயிட் லுகேமியாவுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 14 வயதில் காலமானார்.
பெய்னின் குடும்பத்தினர் அவரது 1.9 மில்லியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மரணத்தை உறுதிப்படுத்தினர்.
“அவர் தனது 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இடைவிடாத புற்றுநோயுடன் வாழ்ந்தார், ஆனால் பெரும்பாலானவர்களை விட முழுமையாகவும் நன்றியுடனும் வாழ்ந்தார்” என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரிய புற்றுநோயுடனான தனது போராட்டத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் நீண்ட காலமாக ஆவணப்படுத்திய பெய்ன்,சிகிச்சையின் போது அவருக்கு மூன்று எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, பெய்ன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் “அன்றாட விஷயங்களை” பகிர்ந்து கொண்டார். பதிவில் அவரது நட்பு, உணவு மற்றும் ஸ்டைல் பற்றிய பார்வைகள் அடங்கும்.
“நான் தினமும் தொடர்ந்து வலியுடன் வாழ்ந்து வருகிறேன், என் வாழ்க்கை இப்படித்தான் தெரிகிறது,” என்றும் பதிவிட்டுள்ளார்.