சாமர சம்பத் எம்.பிக்கு பொலிஸ் அமைச்சர் பதிலடி!

நாட்டுக்காக சிங்கம்போல வேலைசெய்துள்ளேன். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது கிடையாது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொலிஸில் இருந்து விலகினேன்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நான் இந்நாட்டில் சிங்கம்போல் வேலை செய்துள்ளேன். தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை. பொலிஸில் சிறப்பாக செயல்பட்டு, தனிப்பட்ட காரணத்துக்காவே விலகினேன்.
இவர் (சாமர சம்பத் தஸநாயக்க) கூறிய விடயங்கள் அனைத்தும் போலியானவை.
எமது அரசாங்கம் மக்களை கொல்லும் அரசாங்கம் அல்ல, மக்களை பாதுகாக்கும் அரசாங்கமாகும். எனவே, சாமர சம்பத் தசநாயக்கவும் பாதுகாக்கப்படுவார்.
அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். சாமர தஸநாயக்க கூறிய விடயங்களை முற்றாக நிராகரிக்கின்றேன்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்