மெக்ஸிகோவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்து – 07 பேர் பலி!
மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மெக்ஸிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் (Adrián Hernández) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மெக்ஸிகோ நகரத்திற்கு மேற்கே சுமார் 31 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் அருகில் இருந்து தொழிற்துறை மையத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





