மக்களின் எதிர்ப்பு – பல்கேரிய அரசாங்கம் கவிழ்ந்தது!
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பல்கேரிய அரசாங்கம் இன்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது.
பல்கேரியா யூரோ மண்டலத்தில் இணைய சில வாரங்கள் இருக்கும் நிலையில் இந்த இராஜினாமா வந்துள்ளது.
அரசாங்கத்தின் ராஜினாமா மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக பிரதமர் ரோசன் ஜெலியாஸ்கோவ் (Rosen Zhelyazkov) கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அதிக வரிகள், மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் அதன் தோல்வி ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் உள்பட ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் வரை கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அரசாங்கம் தற்போது பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





