மியாமியில் (Miami) இடம்பெறும் அமைதி பேச்சுவார்த்தை – உக்ரைனின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமா?
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மியாமியில் (Miami) ஆக்கபூர்வமாக நடந்து வருவதாக புடினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பிய பங்காளிகளுடன் பரந்த ஆலோசனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
உக்ரைன் ஜனாதிபதி , போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்க ஜனாதிபதி தீவிர பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைதியை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ஆற்றலையும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை செயல்முறை மூலம் ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தும் பாதுகாப்பு மற்றும் உக்ரைனின் வேண்டுகோளை அமெரிக்கா தலைவர்கள் எடுத்துரைப்பார்கள் என நம்பப்படுகிறது.





