இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் – 11 பேர் கைது
இந்தியக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகச் நுழைந்த பாகிஸ்தான்(Pakistan) மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை(ICG) பறிமுதல் செய்துள்ளது.
மேலும், குறித்த படகில் இருந்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குஜராத்தில்(Gujarat) உள்ள ஜகாவ் மரைன்(Jakhau Marine) காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படை துரித நடவடிக்கையாக பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் 11 பணியாளர்களுடன் ஒரு பாகிஸ்தான் மீன்பிடிப் படகைக் கைது செய்தது என்று குஜராத் பாதுகாப்புத் துறை அதிகாரி அபிஷேக் குமார் திவாரி(Abhishek Kumar Tiwari) Xல் பதிவிட்டுள்ளார்.





