ஒடிசா புகையிரத விபத்தில் இறந்த ஒருவரின் உடலுக்கு உரிமை கோரும் பல குடும்பத்தினர்!
ஒடிசாவின் பாலசோரில் நடந்த புகையிரத விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் குடும்பத்தினருக்கு உதவியாக புவனேஸ்வர் மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு இணைந்து உதவி மையங்களை ஏற்படுத்தி உள்ளன.

இது குறித்து புவனேஸ்வர் நகர துணை காவல் ஆணையாளர் பிரதீக் சிங் கூறுகையில், ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் குழப்பமான நிகழ்வும் காணப்படுகிறது.
இதுபோன்ற நேரத்தில் நாங்கள் மரபணு பரிசோதனைக்கு செல்கிறோம்.
அனைத்து உடல்களில் இருந்தும் மரபணு மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.





