நொவா கவோவ்கா அணை தகர்ப்பு; உக்ரைனில் நீரில் மிதக்கும் கண்ணிவெடிகள்!

ரஷ்யா -உகரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா கவோவ்கா அணை ரஷ்யாவால் தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பேரிடர் காரணமாக கண்ணிவெடிகள் ஆபத்து உருவாகியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என செஞ்சிலுவை அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.அதோடு முன்னர் கண்ணிவெடிகள் எங்கு உள்ளன என எங்களிற்கு தெரிந்திருந்தது அணை தகர்ப்பிற்கு பின்னர் அவை எங்குள்ளன என்பது தெரியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஸ்யா கைப்பற்றிய பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலகண்ணிவெடிகள் மிதக்கும் கண்ணிவெடிகளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரி, அவற்றால் பெரும் ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.மேலும் , இடிபாடுகளுடன் மோதுண்டால் அவை வெடிக்கலாம் எனவும் உக்ரைன் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.