தனது மகளின் வாரிசு அந்தஸ்தை உறுதிப்படுத்திய வட கொரியத் தலைவர் ; சியோல் உளவு நிறுவனம்

தென்கொரியாவின் உளவுத்துறை வடகொரியாவின் அடுத்த தலைவராகக் கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ தேர்வுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் சீனாவில் நடந்த மாநாட்டில் ஜூ ஏ கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஸி சின்பிங், ரஷ்ய அதிபர் புட்டின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் இருந்த அம்மாநாட்டில் கிம் ஜோங் உன்னுடன் ஜூ ஏ இருந்தார். மேலும் ஜூ ஏவுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாகவே ஜூ ஏ வடகொரியாவின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சோல் மீண்டும் அதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் ஜூ ஏவுக்கு அண்ணன் இருப்பதாகவும் அவர் ரகசியமாகத் தலைமைத்துவப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கிம் ஜோங் உன்னுக்கு எத்தனைப் பிள்ளைகள் உள்ளனர் என்பது பற்றிய சரியான தகவல்கள் ஏதும் இல்லை. அவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.