அவுஸ்திரேலியாவில் குழந்தைகளை சிறையில் அடைக்க புதிய சட்டம்
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்து அரசு, குழந்தைகளை சிறையில் அடைக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது.
இதன் மூலம் அரசாங்கம் மனித உரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர்களை சிறையில் அடைப்பது உள்ளிட்ட இளைஞர் நீதிச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
10 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த சட்டத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இதன்படி, சிறுவர்களை காலவரையறையின்றி பொலிஸ் பாதுகாப்பு இல்லங்களில் தடுத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)