3,500 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை எகிப்துக்கு திருப்பி அனுப்பும் நெதர்லாந்து
ஒரு டச்சு கலைக் கண்காட்சியில் கிடைத்த 3,500 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை எகிப்துக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நெதர்லாந்து(Netherland) பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்துக்கு(Egypt) விஜயம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப்(Dick Schoof) ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியைச்(Abdel Fattah al-Sisi) சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிமு 1479–1425 வரையிலான பார்வோன் துட்மோஸ் IIIன்(Pharaoh Thutmose III) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியைச் சித்தரிக்கும் கலைப்பொருள் 2011ம் ஆண்டு திருடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
டச்சு காவல்துறை மற்றும் கலாச்சார பாரம்பரிய ஆய்வாளர் நடத்திய விசாரணையில், சிற்பம் எகிப்திலிருந்து சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்த சிற்பத்தை வைத்திருந்த வியாபாரி விசாரணைக்குப் பிறகு அதை தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பி வழங்கப்படும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், 2025ம் ஆண்டின் இறுதிக்குள் நெதர்லாந்தில் உள்ள எகிப்திய தூதரிடம் இந்த கலைப்பொருளை ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக டச்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது.





