முல்லேரியா குழந்தை மரணம்! ஒருவா் கைது

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் அடிப்படையில் ஒருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். .
முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் 5 வயது குழந்தை ஒன்றின் சடலம்
மீட்கப்பட்டது.
119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று (08) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வேலைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்துள்ளமை தொியவந்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)