நியூசிலாந்தில் தனது பிள்ளைகளை கொலை செய்து 4 வருடங்களாக கிடங்கில் வைத்திருந்த தாய்

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் தனது இரண்டு பிள்ளைகளை கொன்று, பின்னர் ஒரு சேமிப்பு அறையில் விட்டுச் சென்ற ஒரு தாய், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் தனது 8 வயது மகளையும் 6 வயது மகனையும் உணவில் விஷம் வைத்து கொன்றார்.
பின்னர் குழந்தைகளின் உடல்கள் மூன்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு, ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன.
அதனை தொடர்ந்து அந்தப் பெண் தனது பெயரை மாற்றி தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றதை நியூசிலாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு அவர் நான்கு ஆண்டுகளாக பிள்ளைகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கட்டணத்தையும் செலுத்தி வந்துள்ளார்.
தென் கொரியாவில் கைது செய்யப்பட்ட தாய், நியூசிலாந்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
கணவர் இறந்த பிறகு அந்தப் பெண் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.
14 நாள் விசாரணைக்குப் பிறகு தாய் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.