அமெரிக்கா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!
அமெரிக்கா முழுவதும் 1600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நியூயார்க் நகருக்கு அருகிலுள்ள மூன்று பெரிய விமான நிலையங்கள் மிகவும்இ பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நெவார்க் லிபர்ட்டி இன்டர்நேஷனல்இ ஜான் எஃப். கென்னடி இன்டர்நேஷனல் மற்றும் லாகார்டியா விமான நிலையங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமான சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில்இ பயணிகள் தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகவும்இ சில பயணிகளின் பொதிகள் காணாமல்போயுள்ளதாகவும் பயணி ஒருவர்ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.





