பிரித்தானியாவில் 38000 இற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!
 
																																		பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ‘அவசர வேலை’ திட்டத்தின் கீழ் 38,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை சராசரியாக ஒவ்வொரு நாளும் 129 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சக தரவு காட்டுகிறது.
சிறைச்சாலை நெரிசலை சமாளிக்க அவசர நடவடிக்கையாக, சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான நிலையான கால தண்டனை அனுபவிக்கும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட போதிலும், சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் 86,966 ஆக இருந்து இந்த ஆண்டில் 87,465 ஆக உயர்ந்துள்ளது.
அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சிறை தண்டனை அனுபவித்து வந்த புலம்பெயர் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த தகவல்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
