பிரித்தானியாவில் சாண்ட்விச் சாப்பிட்ட 200க்கும் அதிகமானோர் பாதிப்பு: வெளியான புதிய தகவல்
பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடிகள் பல, 60க்கும் மேற்பட்ட சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves), ஈ கோலை கிருமியின் தாக்கத்துக்குக் காரணமாக அமைந்திருக்ககூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency – FSA) தெரிவித்துள்ளது.
தற்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் இந்த ஈ கோலை கிருமி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்பட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், சாண்ட்விச்கள் தயாரானதுமே அவை விற்கப்பட்டுவிடுகின்றன, மக்கள் அவற்றை உண்டுவிடுகிறார்கள். ஆக, அந்த சாண்ட்விச்சிலிருந்த லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் கிருமி பரவியது என்பதை உறுதி செய்வது கடினம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்..