மொரகஹகந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் அபாயம்
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களுக்குள் மழை தொடர்ந்து பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் முழுமையாக நிரம்பும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




