இந்தியா செய்தி

காந்தியின் சிந்தனைகள் மீது மோடிக்கு அதீத வெறுப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர்மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“மோடிக்கு இரண்டு விடயங்கள் மீது அதீத வெறுப்பு உள்ளது. ஒன்று மகாத்மா காந்தியின் கொள்கைகள், மற்றொன்று ஏழைகளின் உரிமைகள்.

மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது.

இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது, மேலும் கொவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் இருந்தது.

இருப்பினும், இந்தத் திட்டம் பிரதமர் மோடிக்கு எப்போதும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, அவரது அரசு இதனைத் திட்டமிட்டு பலவீனப்படுத்த முயன்று வருகிறது. இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டது,

1. வேலைவாய்ப்பு உரிமை – வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.

2. கிராமங்கள், தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தாங்களே தீர்மானிப்பதற்கான சுயாட்சி.

3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.

இப்போது இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டு கருவியாக மாற்ற முயற்சிக்கிறார்.

1. பட்ஜெட், திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும்.

2. செலவுகளில் 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.

3. நிதி இல்லாவிட்டால் அல்லது அறுவடை காலங்களில், தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.

இந்த புதிய சட்டமூலம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை நேரடியாக அவமதிப்பதாகும். வேலையின்மையால் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்ததோடு மட்டுமில்லாமல், தற்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை இலக்குவைக்கிறது.

தெரு முதல் நாடாளுமன்றம் வரை பாஜக அரசின் மக்கள்விரோத மசோதாவை எதிர்ப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!