விளையாட்டு

IPLல் டக் அவுட் சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.

சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும்.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!