கோவாவில் உள்ள இரவு விடுதியில் பாரிய தீவிபத்து – 23 பேர் பலி!
இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப் ஊழியர்கள் என்றும், பலர் கிளப்பைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு அதிக கூட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த இந்திய அதிகாரிகள் நேற்று இரவு முழுவதும் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மாநிலமான கோவா, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.




