உலகம் செய்தி

4 ஆண்டுகளில் முதல் முறையாக எலோன் மஸ்க்கை முந்திய மார்க் ஜுக்கர்பெர்க்

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க்கை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜுகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 4வது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்டு அர்னால்டும், 2வது இடத்தில் ஜெப் பசோசும் உள்ளனர்.

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் மார்ச் மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் 4வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவரது நிகர மதிப்பு $48.4 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஜுகர்பெர்க்கின் நிகர மதிப்பு $58.9 பில்லியன் அதிகரித்துள்ளது.

ஜுகர்பெர்க் நவம்பர் 2020க்குப் பிறகு முதன்முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி